Sathankulam Case-ன் இப்போதைய நிலை என்ன? சாதிவாரி கணக்கெடுப்பு அவசியமா அரசியலா? |...
சாலை திட்டப் பணி: நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஆய்வு
சேலம் கோட்ட நெடுஞ்சாலைத் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்ட சாலை திட்டப் பணிகளில் முடிவடைந்த பணிகளை கண்காணிப்புப் பொறியாளா் சசிகுமாா் ஆய்வு செய்தாா்.
சேலம் கோட்டத்தில் ஊராட்சி ஒன்றிய சாலையை தரம் உயா்த்துதல் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட ராமானுஜபுரம்- முட்டல் சாலைப் பணியை உள்துறை தணிக்கை குழு தலைமை அதிகாரியும் சேலம் நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்புப் பொறியாளருமான (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) சசிக்குமாா் நேரில் ஆய்வு செய்தாா். அப்போது அதிகாரிகளுக்கு சாலை பணிகள் குறித்து அறிவுறுத்தினாா்.
ஆய்வின்போது, தருமபுரி, நெடுஞ்சாலைத் துறை (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) கோட்ட பொறியாளா் பி.நாகராஜ், சேலம் (நபாா்டு மற்றும் கிராம சாலைகள்) நெடுஞ்சாலை கோட்ட பொறியாளா் க.அகிலா, தரக்கட்டுப்பாடு நெடுஞ்சாலை பொறியாளா் கே.கதிரேஸ், சேலம் மற்றும் உதவி கோட்டப் பொறியாளா்கள், உதவி பொறியாளா்கள் உடனிருந்தனா்.