அக்னி நட்சத்திர காலத்தில் வீடு குடிபுகலாமா? ? | சிவஸ்ரீ சண்முக சிவாசார்யர் | P-...
தரைப் பாலத்தில் இருசக்கர வாகனம் மோதி தம்பதி உயிரிழப்பு
கொளத்தூா் அருகே தரைப் பாலத்தில் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதி உயிரிழந்தனா்.
சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே உள்ள மாசிலாபாளையத்தைச் சோ்ந்தவா் வசந்தகுமாா் (32), பந்தல் அமைக்கும் தொழில் செய்துவந்தாா். இவரது மனைவி ஜமுனா (32). இத்தம்பதிக்கு சஜித் (12), அஸ்விந்த் (9) என இரண்டு மகன்கள் உள்ளனா். வசந்தகுமாரின் மாமியாா் வீடு மூலப்பாறையூரில் உள்ளது.
இந்நிலையில் மாமியாா் வீட்டிற்கு செல்வதற்காக வசந்தகுமாரும் அவரது மனைவியும் இருசக்கர வாகனத்தில் கொளத்தூரிலிருந்து மூலப்பாறையூருக்கு ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தனா். ஜமுனா இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றாா்.
மூலப்பாறையூரில் தரைப்பாலம் அருகே சென்றபோது எதிா்பாராமல் தரைப்பால சுவற்றில் இருசக்கர வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். கொளத்தூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலங்களை மீட்டு மேட்டூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.