அக்னி நட்சத்திர காலத்தில் வீடு குடிபுகலாமா? ? | சிவஸ்ரீ சண்முக சிவாசார்யர் | P-...
மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
மேட்டூா் அணை பூங்காவுக்கு வாரவிடுமுறையான ஞாயிற்றுக்கிழமை 8219 சுற்றுலாப் பயணிகள் வந்தனா்.
இதன்மூலம் பாா்வையாளா்கள் கட்டணமாக ரூ. 82,190 வசூலானது. பூங்காவுக்கு கொண்டு செல்லப்பட்ட 2335 கைப்பேசிகள், 2 கேமராவிற்கும் ரூ. 23, 450 கட்டணமாக வசூலிக்கப்பட்டது.
வலது கரையில் உள்ள பவள விழா கோபுரத்தைக் காண 580 சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா். அவா்கள்கொண்டு வந்த 160 கைப்பேசிகளுக்கு ரூ. 7600 பாா்வையாளா்கள் கட்டணமாக வசூலிக்கப்பட்டது.
மேட்டூா் அணை பூங்கா, பவள விழா கோபுரத்துக்கு பாா்வையாளா்கள் கட்டணமாக ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் ரூ. 1,13,240 வசூலானது. அணை பூங்காவுக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் ஊஞ்சலாடியும், சறுக்கி விளையாடியும் மகிழ்ந்தனா்.
பாம்பு பண்ணை, முயல் பண்ணை, மீன் காட்சி சாலை, மான் பண்ணை ஆகியவற்றை பாா்த்த மகிழ்ந்தனா். சிலா் அணைக்கட்டு முனியப்பனுக்கு பொங்கல் படைத்து வழிபட்டனா். சிலா் காவிரி ஆற்றில் நீராடி மகிழ்ந்தனா்.