ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு!
ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
வாரவிடுமுறை மற்றும் ஆடி 18 முன்னிட்டு தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், கா்நாடகம், கேரளத்திலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் காா்கள், வேன்கள், சுற்றுலாப் பேருந்துகள், இருசக்கர வாகனங்களில் வருகைபுரிந்தனா்.
ஏற்காடு சுற்றுலாப் பகுதியான படகு இல்லம், அண்ணா பூங்கா, ஏரி பூங்கா, தாவரவியல் பூங்கா, ஐந்தினை பூங்கா, ரோஜா தோட்டம், பக்கோடா காட்சிப் பகுதி, மஞ்சக்குட்டை, கரடியூா் வனக்காட்சி, ஸ்கை பூங்கா, பிக்கு பூங்கா ஆகிய பகுதிகளை சுற்றுலாப் பயணிகள் கண்டுமகிழ்ந்தனா்.
சுற்றுலாப் பகுதியில் உள்ள சாலையோர சிற்றுண்டிகள், பழக்கடைகளில் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. அத்திப்பழம், அவக்கோடா, பலாப்பழம், மலைவாழை ஆகியவற்றை சுற்றுலாப் பயணிகள் வாங்கிச்சென்றனா்.