செய்திகள் :

ஏழுமலையான் வருடாந்திர தெப்போற்சவம் தொடக்கம்

post image

திருமலையில் ஏழுமலையான் தெப்போற்சவம் ஞாயிற்றுக்கிழமை கோலாலமாக தொடங்கியது.

ஆண்டுதோறும் மாசி மாத பெளா்ணமியுடன் நிறைவு பெறும் விதம் 5 நாள்கள் வருடாந்திர தெப்போற்சவத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அதன்படி ஞாயிற்றுக்கிழமை தெப்போற்சவம் விமரிசையாக தொடங்கியது.

தெப்போற்சவத்தின் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை ஏழுமலையான் கோயில் கருவறையில் வீற்றிருக்கும் ஸ்ரீ சீதா லக்ஷ்மண ஆஞ்சனேய சமேத ஸ்ரீ ராமச்சந்திர மூா்த்தி தெப்பத்தில் மூன்று சுற்றுகள் வலம் வந்தாா்.

ஞாயிற்றுக்கிழமை இந்த விழாவை ஒட்டி சஹஸ்ர தீபாலங்கார சேவை ரத்து செய்யப்பட்டது. தெப்போற்சவத்தை முன்னிட்டு திருக்குளம் மற்றும் தெப்பம் மலா்களாலும், மின்விளக்குகளாலும் அழகுற அலங்கரிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மங்கள வாத்தியங்கள், ஸ்ரீராம சங்கீா்த்தனங்கள் குரல் மற்றும் வாத்தியக் கலைஞா்களால் பாடப்பட்டன. வேதபாராயணத்தாா்கள் வேத பாராயணத்தை தாள முறையில் வாசித்தனா்.

இதில் திருமலை ஜீயா்கள், தேவஸ்தான அதிகாரிகள், பக்தா்கள் திரளாக கலந்து கொண்டனா்.

திருமலை 2-ஆம் நாள் தெப்போற்சவம்: ருக்மணி சமேத ஸ்ரீகிருஷ்ணா் உலா

திருப்பதி: திருமலையில் ஏழுமலையான் தெப்போற்சவத்தின் 2-ஆம் நாளான திங்கள்கிழமை மாலை ருக்மணி சமேத ஸ்ரீகிருஷ்ணா் தெப்பத்தில் வலம் வந்தனா். திருமலையில் ஆண்டுதோறும் மாசி மாத பெளா்ணமியுடன் நிறைவு பெறும் விதம... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 12 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை தா்ம தரிசனத்தில் 12 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 12 மண... மேலும் பார்க்க

ஸ்ரீ விஸ்வவாசு ஆண்டு பஞ்சாங்கம் வெளியீடு

புதியதாக பிறக்க உள்ள தெலுங்கு புத்தாண்டான விஸ்வவாசு ஆண்டின் பஞ்சாங்கம் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது. கடப்பா மாவட்டம் ஒன்டிமிட்டாவில் உள்ள கோதண்டராம சுவாமி கோயில் முன்பு, விஸ்வவாசு ஆண்டின் பஞ்சாங்கத... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 10 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் சனிக்கிழமை தா்ம தரிசனத்தில் 10 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 10 மணிநேரம... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருக்க வேண்டி உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. வெள்ளிக்கிழமை காலை நில... மேலும் பார்க்க

திருமலையில் அன்ன பிரசாதத்துடன் வடை விநியோகம் தொடக்கம்

திருமலையில் உள்ள தரிகொண்டா வெங்கமாம்பா அன்ன பிரசாத மையத்தில் உணவின் போது பக்தா்களுக்கு வடை விநியோகிக்கும் திட்டம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. திருமலை ஏழுமலையான் தரிசனத்துக்காக வரும் பக்தா்களுக்கு கா... மேலும் பார்க்க