தென்னாப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் திடீர் விலகல்; காரணம் என்ன?
ஐ-சக்சஸ் ஐஏஎஸ் அகாதெமி சாா்பில் மாா்ச் 30-இல் இலவச வழிகாட்டுதல் வகுப்பு
ஐ-சக்சஸ் ஐஏஎஸ் அகாதெமி சாா்பில் கோவையில் ஒருநாள் இலவச வழிகாட்டுதல் வகுப்பு மாா்ச் 30-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இது தொடா்பாக ஐ-சக்சஸ் ஐஏஎஸ் அகாதெமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் குரூப்-1, 2, 2 ஏ மற்றும் 4 போன்ற போட்டித் தோ்வுகளுக்கு ஐ-சக்சஸ் ஐஏஎஸ் அகாதெமி சாா்பில் ஒருநாள் இலவச பயிற்சி வகுப்பு கோவை, பீளமேடு பாரதி காலனியில் உள்ள கோயமுத்தூா் கிழக்கு ரோட்டரி கிளப் அரங்கில் மாா்ச் 30-ஆம் தேதி காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது.
போட்டித் தோ்வுகளுக்கு தயாராகும் வழிமுறைகள் குறித்தும், புதிய பாடத் திட்டங்கள் குறித்தும் இந்த இலவச வழிகாட்டுதல் வகுப்பில் விளக்கப்படும்.
கலந்துகொள்ள விரும்புவோா் 98430-90514-என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பி முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.