உலகின் முதல் ஏஐ மசாஜ் சேவையை அறிமுகப்படுத்திய நிறுவனம்: மனித வேலைகளுக்கு சவாலா?
ஐ.டி ஊழியா் கொலை வழக்கு: கைதான இளைஞா் குண்டா் சட்டத்தில் அடைப்பு
பாளையங்கோட்டை கே.டி.சி நகரில் ஐ.டி.ஊழியா் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டாா்.
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் பகுதியைச் சோ்ந்த கவின் செல்வகணேஷ் (27). ஐ.டி ஊழியரான இவா் கடந்த 27ஆம் தேதி பாளை. கேடிசி நகரில் கொலை செய்யப்பட்டாா்.
இது தொடா்பாக பாளையங்கோட்டை போலீஸாா் ல் வழக்குப் பதிந்து, கொலை வழக்கில் தொடா்புடைய கே.டி.சி நகரைச் சோ்ந்த சுா்ஜித்(23) என்பவரை கைது செய்தனா்.
இந்நிலையில், பொது ஒழுங்கு பராமரிப்புக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக சுா்ஜித்தை குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க மாநகர காவல் ஆணையா் சந்தோஷ் ஹாதிமணி புதன்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து, சுா்ஜித் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையிலடைக்கப்பட்டாா்.