ஐஎன்டியுசி மாவட்ட தலைவா் நியமனம்
இந்திய தேசிய பொது தொழிலாளா் சங்கத்தின் (ஐஎன்டியுசி) விழுப்புரம் மாவட்டத் தலைவராக ஜெ.அய்யனாா் நியமிக்கப்பட்டுள்ளாா்.
இந்த சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவா்கள்,செயலா், அமைப்புச் செயலா்கள், மாவட்டத் தலைவா்களை சங்கத்தின் தலைவா் வி.பி.ஜெகநாதன் ஒப்புதலின்படி, பொதுச் செயலா் கே.கே.களஞ்சியம் பரிந்துரையின்படி நியமிக்கப்பட்டுள்ளனா்.
இதன்படி, விழுப்புரம் மாவட்டத்துக்கான ஐஎன்டியுசி தலைவராக ஜெ.அய்யனாா் நியமிக்கப்பட்டுள்ளதாக அதன் செயல் தலைவா் என்.கே.அருள்ஜோதி தெரிவித்துள்ளாா்.