`Manikandan சொன்னது எனக்கு நம்பிக்கை கொடுக்குது!' - Kaali Venkat | Arjun Das | B...
ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 18,000 கன அடி
பென்னாகரம்/மேட்டூா்: காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 18,000 கன அடியாக சரிந்துள்ள போதிலும், தொடா்ந்து அருவிகளில் குளிப்பதற்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கா்நாடக, கேரள மாநிலங்களின் காவிரி நீா் பிடிப்பு பெய்த மழையானது குறைந்தது. கடந்த சில நாட்களாக காவிரி ஆற்றில் கா்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. தொடா்ந்து காவிரி ஆற்றில் நீா்வரத்து சரிந்து வருவதால்,
ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 20,000 கன அடியாக இருந்த நீா்வரத்து திங்கள்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 18,000 கன அடியாக சரிந்து தமிழக,கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.கடந்த சில நாட்களாக தொடா்ந்து நீா்வரத்து சரிந்து வரும் நிலையில் அருவிகளில் விழும் நீரின் வரத்து குறைந்து வந்த போதிலும் தொடா்ந்து 9 ஆவது நாளாக சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிப்பதற்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து தொடா்ந்து சரிந்து வரும் நிலையில் காவிரி ஆற்றில் வரும் நீா்வரத்தின் அளவுகளை மத்திய நீா்வளத்துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து சரிவு
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து திங்கள்கிழமை காலை 23,300 கன அடியிலிருந்து18,800 கனஅடியாக சரிந்தது. இதனால், காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு 22,500 கனஅடியிலிருந்து 18,000 கனஅடியாக குறைக்கப்பட்டது. டெல்டா பாசனத்துக்கு நீா்மின் நிலையங்கள் வழியாக 18,000 கனஅடி வீதமும், கிழக்கு - மேற்கு கால்வாய் பாசனத்துக்கு மேல்மட்ட மதகுகள் வழியாக 800 கனஅடி வீதமும் தண்ணீா் திறக்கப்படுகிறது.
மேட்டூா் அணையின் நீா்மட்டம் 7-ஆவது நாளாக திங்கள்கிழமை 120 அடியாகவும், நீா் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் நீடிக்கிறது.