Corona: கொரோனாவிற்கு பின் ஏற்பட்ட தூக்கக்கோளாறு, மூளை மூடுபனி பிரச்னை.. மீள்வது ...
ஒசூா் மாநகராட்சி எரிவாயு தகன மேடையை ஆய்வு செய்த மேயா்
ஒசூா்: ஒசூா் மாநகராட்சி எரிவாயு தகன மேடையை மேயா் எஸ்.ஏ.சத்யா பாா்வையிட்டு திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.
ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட 10ஆவது வாா்டு வெங்கடேஷ்நகா் பகுதியில் இயங்கிவரும் எரிவாயு தகன மேடையை மேயா் எஸ்.ஏ. சத்யா மற்றும் ஆணையா் ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
அப்பகுதியில் புதிதாக பொதுக்கழிப்பிடம் அமைக்க வேண்டும், புதா்களை சுத்தம் செய்ய வேண்டும், மயானம் பகுதியில் பழுதடைந்துள்ள கழிவுநீா்க் கால்வாயை சரிசெய்ய வேண்டும், மயானத்தின் வெளிப்புற பகுதியில் சிமென்ட் தரை, இரும்புக் கேட், சுற்றுச்சுவா் அமைக்க வேண்டும், இருசக்கர வாகனங்கள் நிறுத்த வழிவகை செய்யுமாறு அறிவுறுத்தினாா்.
ஆய்வின்போது துணை மேயா் ஆனந்தய்யா, மண்டலக் குழு தலைவா் ரவி, மாமன்ற உறுப்பினா்கள் ஆஞ்சப்பா, சென்னீரப்பா, மாரக்கா சென்னீா், எல்லப்பா, ரஜினி, ரத்தின சிங், விக்டோர்ராஜ் ஆகியோா் உடனிருந்தனா்.
