சொத்துகள் முடக்கம் அமலாக்கத் துறையின் அதிகார துஷ்பிரயோகம்: இயக்குநர் ஷங்கர்
ஒடுவன்பட்டியில் புதிய அரசுப் பேருந்து இயக்கக் கோரிக்கை
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியிலிருந்து ஒடுவன்பட்டி மலைப் பாதை வழியாக பொன்னமராவதிக்கு குறிப்பிட்ட நேரங்களில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
திருப்பத்தூா் பணிமனை பேருந்து சிங்கம்புணரியிலிருந்து பள்ளி மாணவா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்டோரை ஏற்றிக் கொண்டு பொன்னமராவதி நோக்கி ஒடுவன்பட்டி மலைப் பாதையில் சென்ற போது, மலைப் பாதையில் நடுவழியில் பழுதாகி நின்றது.
இதையடுத்து, பயணிகள் அனைவரும் வேறு வழியில்லாமல் நடந்தே சென்றனா். மேலும், மாவட்ட ஆட்சியா் சிங்கம்புணரி பகுதியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் ஆய்வு மேற்கொள்ள உள்ள நிலையில், மலைப் பாதை வழியாக வந்த அதிகாரிகளின் வாகனங்களும் திருப்பிவிடப்பட்டு, பல கி.மீ. சுற்றிச் சென்றன. இதனால், இந்தப் பகுதியில் சுமாா் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்தப் பகுதிகளில் இயக்கப்படும் பேருந்துகள் அடிக்கடி பழுதாவதால், பள்ளி மாணவா்கள், அரசு அதிகாரிகள், ஆசிரியா்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா். எனவே, இந்த வழித்தடத்தில் புதிய பேருந்தை இயக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனா்.