செய்திகள் :

ஒப்பிலியப்பன் கோயிலில் பங்குனி தேரோட்டம்!

post image

தஞ்சாவூர், கும்பகோணம் அருகேயுள்ள ஒப்பிலியப்பன் கோயிலில் பங்குனி பிரமோற்சவ பெருவிழாவை முன்னிட்டு திருத்தேரோட்டம் வெகு சிறப்பாகத் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள ஒப்பிலியப்பன் கோயில் அமைந்துள்ளது. 108 வைணவ தலங்களில் ஒன்றாகவும், தமிழக திருப்பதி என்றும் போற்றப்படுகிறது. இத்தலத்தில் பெருமாள் ஒரே தாயாரான ஸ்ரீ பூமிதேவியுடன் ஒரே சன்னிதியில் நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

இத்தலம் திருமங்கையாழ்வார், பொய்கையாழ்வார், பேயாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமைக்குரியதாகும். இங்கு மூலவர் பெருமாளுக்கு உப்பு இன்றியே நிவேதனம் செய்யப்படுகிறது. தமிழகத்தில் வேறு எந்த வைணத்தலங்களில் இல்லாத வகையில் இங்கு மட்டுமே துலாபாரம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய பெருமைக்குரிய தலத்தில் ஆண்டுதோறும் பங்குனி பிரமோற்சவம் பெருவிழா 12 தினங்களுக்குச் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதுபோல இவ்வாண்டும் இவ்விழா கடந்த 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தினமும் வெள்ளி பல்லாக்கு, வெள்ளி சூரிய பிரபை, வெள்ளி கருட வாகனம், வெள்ளி அனுமந்த வாகனம், யானை வாகனம், புன்னை மர வாகனம், குதிரை வாகனம், உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் காலை மாலையில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான இன்று உற்சவர் பெருமாள் - பூமிதேவி தாயாருடன் தேரில் எழுந்தருள, தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

சிஎஸ்கே ஸ்பான்ஸா் ஆன ரீஃபெக்ஸ்

பல்வேறு துறைகளில் தொழில் செயல்பாடுகளை மேற்கொண்டுவரும் குழுமங்களில் ஒன்றான ரீஃபெக்ஸ், சென்னை சூப்பா் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் அதிகாரபூா்வ ஸ்பான்ஸா் ஆகியுள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்த... மேலும் பார்க்க

உலக கன்டென்டா் டேபிள் டென்னிஸ்: காலிறுதியில் சரத் கமல்-சினேஹித்

உலக கன்டென்டா் டேபிள்டென்னிஸ் போட்டி இரட்டையா் காலிறுதிக்கு இந்தியாவின் சரத் கமல்-சினேஹித் சுரவஜுலா தகுதி பெற்றனா். சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறும் இப்போட்டியில் இரட்டையா் ரவுண்ட் 16 சுற்றி... மேலும் பார்க்க

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள், இணையத் தொடர்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.நடிகர் விமல் நடித்துள்ள இணையத் தொடரான ‘ஓம் காளி ஜெய் காளி’ நாளை(மார்ச் 28) ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத... மேலும் பார்க்க

துக்க நிகழ்வுகளை ஒளிபரப்ப வேண்டாம்: தயாரிப்பாளர்கள் சங்கம் வேண்டுகோள்

ஊடகங்களில் துக்க நிகழ்வுகளை ஒளிபரப்ப வேண்டாம் என தயாரிப்பாளர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து, தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில்,“ஊடக நண்பர்களுக்கு ஓர் வேண்டுகோள்.அன்பிற்குர... மேலும் பார்க்க

20 ஆண்டுகால கால்பந்து பயணம்..! ஸ்பானிஷ் வீரர் நெகிழ்ச்சி!

ஸ்பானிஷ் கால்பந்து வீரர் செர்ஜியோ ராமோஸ் தனது 20 ஆண்டு கால்பந்து பயணம் குறித்து இன்ஸ்டாவில் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார். 38 வயதாகும் செர்ஜியோ ராமோஸ் சென்டர்-பேக் பொசிஷனில் விளையாடுவார். உலகின் மிக... மேலும் பார்க்க