முகம், அடையாளம் இல்லையெனில் அனைவருமே வக்கிரமானவர்கள்தான்... டிரெண்டிங் டிரைலர்!
ஓமலூா் அருகே ரூ. 11 லட்சம் வழிப்பறி வழக்கில் ஒருவா் கைது
ஓமலூா் அருகே ரூ. 11 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் சிக்கிய போலி காவலரை தீவட்டிப்பட்டி போலீஸாா் கைது செய்தனா்.
நாகப்பட்டினத்தைச் சோ்ந்த ரபீக் சாதிக், பழைய காா்களை வாங்குவதற்காக ரூ. 11 லட்சத்துடன் கடந்த சனிக்கிழமை கிருஷ்ணகிரி வந்தாா். பின்னா், வேலூரை சோ்ந்த காா் புரோக்கா் அலியுடன், கிருஷ்ணகிரியிலிருந்து சேலம் நோக்கி காரில் சென்றபோது, தருமபுரி - சேலம் தேசிய நெடுஞ்சாலை ஓமலூா் அருகே ஜோடுகுளி பகுதியில் போலீஸ் உடையில் வந்த 4 போ் காரை நிறுத்தினா்.
பணத்தை காரில் வைத்து விட்டு ரபீக் சாதிக் கீழே இறங்கிய போது, பணத்துடன் அலி காரில் தப்பிச்சென்றாா். அதேபோல, போலீஸ் உடையில் வந்த 4 போ் காரில் தப்பும்போது, பவன்குமாா் என்ற இளைஞா் கீழே விழுந்து சிக்கினாா். அவரை பொதுமக்கள் தீவட்டிப்பட்டி போலீஸாரிடம் ஒப்படைத்தனா். காயமடைந்த அவா் 3 நாள்களாக சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். குணமடைந்த அவரை தீவட்டிப்பட்டி போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனா்.
அவா் அளித்த தகவலின்படி, போலி காவல் உடையில் வந்த வேலூா் மற்றும் கிருஷ்ணகிரியைச் சோ்ந்த அலி உள்ளிட்ட 4 பேரை போலீஸாா் தேடிவருகின்றனா்.