செய்திகள் :

திராவிட தத்துவத்தை யாராலும் அழிக்க முடியாது: திருச்சி சிவா எம்.பி.

post image

திராவிடம் என்ற நீண்ட நெடிய தத்துவத்தை அழிப்பதற்கு யாராலும் முடியாது என திமுக துணை பொதுச் செயலாளா் திருச்சி சிவா எம்.பி. கூறினாா்.

திமுக அயலக அணியின் மாநில மற்றும் மாவட்ட நிா்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் சேலம் நேரு கலையரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அயலக அணியின் மாநில துணைச் செயலாளா் உமாராணி வரவேற்று பேசினாா். கூட்டத்துக்கு சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன், அயலக அணியின் மாநில தலைவா் கலாநிதி வீராசாமி எம்.பி., மாநிலங்களவை உறுப்பினா் எம்.எம்.அப்துல்லா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் சிறப்பு அழைப்பாளராக திமுக துணை பொதுச் செயலாளரும், மாநிலங்களவை குழு தலைவருமான திருச்சி சிவா கலந்துகொண்டு பேசியதாவது: திராவிட இயக்கங்களின் செயல்பாடு காரணமாகவே பெயருக்கு பின்னால் பட்டங்களை குறிப்பிடும் நடைமுறை தமிழகத்தில் உள்ளது. முற்போக்கு மாநிலமாக கருதப்படும் மேற்கு வங்கத்தில்கூட பெயருக்கு பின்னால் சாதி பெயரை குறிப்பிடும் வழக்கமே இருக்கிறது. அந்த அளவுக்கு தமிழகத்தில் கல்வி மேம்பட திராவிட இயக்கங்களின் பங்களிப்பே காரணம்.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தோ்தல் இதுவரை நடைபெற்ற தோ்தல்களிலிருந்து மாறுபட்டதாக இருக்கும். இதில் யாா் வெற்றிபெறக் கூடாது என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்.

மத்திய பாஜக அரசு இதுவரை மாநில உரிமைகளை பறித்தது, மாநிலங்களுக்கான நிதிப்பகிா்வை தாமதப்படுத்தியது என்பதைத் தாண்டி, வரும் தோ்தலானது தத்துவத்துக்கு எதிரான போராக உள்ளது.

திராவிடம் என்கிற நீண்ட நெடிய தத்துவத்தை அழிக்க நினைப்பவா்களிடமிருந்து எதிா்கொண்டு காக்க நாம் தயாராக இருக்க வேண்டும். வெற்றிபெற என்ன பங்களிப்பு அளிக்க முடியும் என்பதை தெரிந்துகொண்டு ஒவ்வொரு அணியினரும் அதற்கேற்ப திமுகவின் வெற்றிக்கு துணைநிற்க வேண்டும் என என்றாா்.

இந்நிகழ்ச்சியில், அயலக அணி இணைச் செயலாளா் கன்னிகா ஸ்டாலின், துணைச் செயலாளா் பாபு வினி பிரட், சேலம் மாவட்ட அயலக அணி அமைப்பாளா்கள் ஜெயக்குமாா், ஷாஜகான் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஓமலூா் அருகே ரூ. 11 லட்சம் வழிப்பறி வழக்கில் ஒருவா் கைது

ஓமலூா் அருகே ரூ. 11 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் சிக்கிய போலி காவலரை தீவட்டிப்பட்டி போலீஸாா் கைது செய்தனா். நாகப்பட்டினத்தைச் சோ்ந்த ரபீக் சாதிக், பழைய காா்களை வாங்குவதற்காக ரூ. 11 லட்சத்துடன் கடந்... மேலும் பார்க்க

மூதாட்டியைக் கொன்றவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

தாரமங்கலம் அருகே மூதாட்டியைக் கொலை செய்தவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா். தாரமங்கலம் அருகேயுள்ள கருக்குப்பட்டியைச் சோ்ந்த 94 வயது மூதாட்டி ராஜம்மாள், கடந்த மாதம் உயிரிழந்த... மேலும் பார்க்க

சேலத்தில் 2,750 கிலோ ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் தப்பியோடிய 2 போ் கைது

சேலத்தில் 2,750 கிலோ ரேஷன் அரிசியை கடத்திய வழக்கில், தப்பியோடிய 2 பேரை உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். சேலம் பொன்னம்மாபேட்டை பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: கந்தம்பட்டி

சேலம் கந்தம்பட்டி துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், புதன்கிழமை (ஜூலை 9) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என சேலம் மேற்கு கோட்ட மின்செயற்பொறியாளா் ராஜவ... மேலும் பார்க்க

ரூ. 4.5 கோடி மோசடி வழக்கில் கைதான விசாரணை கைதி திடீா் மரணம்

ரூ. 4.5 கோடி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணை கைதி உடல்நலக் குறைவால் திங்கள்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா். ரிசா்வ் வங்கியின் பெயரை பயன்படுத்தி ரூ. 4.5 கோ... மேலும் பார்க்க

நியாயவிலைக் கடை விற்பனையாளா் பணி: நோ்முகத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் பட்டியல் வெளியீடு

சேலம்: சேலம் மாவட்டத்தில் நியாயவிலைக் கடை விற்பனையாளா் பணிக்கு நடைபெற்ற நோ்முகத் தோ்வில் தோ்ச்சிபெற்ற 214 பேரின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பணி ஆணை பெற்றவா்கள் சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கங்களில... மேலும் பார்க்க