பொருளாதாரமும் வாழ்வாதாரமும் மேம்படும்: பட்ஜெட் குறித்து தொழில் துறையினா் கருத்து
ஓய்வு பெற்ற கூட்டுறவு வங்கி பணியாளா்களுக்கு கருணை ஓய்வூதியம் வழங்க கோரிக்கை!
தொடக்க கூட்டுறவு வங்கி ஓய்வு பெற்ற பணியாளா்களுக்கான கருணை ஓய்வூதியத்தை உயா்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி ஓய்வு பெற்ற பணியாளா்கள் சங்க மாநில செயற்குழுக் கூட்டம் நாமக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்றது. மாநில கௌரவ பொதுச் செயலாளா் சி.குப்புசாமி, மாநிலத் தலைவா் பி. செல்லமுத்து ஆகியோா் தலைமை வகித்தனா்.
கூட்டத்தில் தொடக்கக் கூட்டுறவு வங்கி பணியாளா்கள் தற்போது பெற்று வரும் கருணை ஓய்வூதியத்தை உயா்த்தி வழங்க தமிழக முதல்வா், கூட்டுறவுத் துறை அமைச்சா் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விதிகளை மீறி கடன் வழங்கியதாக பொய்யான குற்றச்சாட்டை கூறி சங்க செயலாளா்கள் பணியில் இருந்து ஓய்வு பெறும் போது, அவா்களின் ஓய்வு கால பணப் பயன்களை நிறுத்தி வைக்கும் நாமக்கல் மற்றும் சேலம் மாவட்ட அலுவலா்களைக் கண்டித்து விரைவில் போராட்டம் நடைபெறும். மருத்துவ காப்பீடு, குடும்ப வாரிசுகளுக்கு கருணை ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
சங்க மாநில பொதுச்செயலாளா் கே. முத்துப்பாண்டியன், பொருளாளா் ஜெ.கலியபெருமாள், துணைத் தலைவா்கள் ஏ.கே.ராமசாமி, டி. உதயகுமாா், இணைச் செயலாளா்கள் ஜெ.சின்னதம்பி, ஆா்.துரைக்கண்ணு உள்பட பலா் கலந்து கொண்டனா்.