மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்: மாவட்டத்தில் 9.83 லட்சம் போ் பயன்!
திருச்செங்கோட்டில் தூய்மைப் பணி
திருச்செங்கோடு அா்த்தநாரீஸ்வரா் கோயிலின் மலைப் பகுதியில் நெகிழிப் பைகளை அகற்றி தூய்மைப்படுத்தும் பணிகள் சனிக்கிழமை நடைபெற்றன.
மத்திய அரசின் சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றத் துறை, தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை உத்தரவின்படி மாணவா்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணா்வு கல்வியின் ஒருபகுதியாக இப் பணிகள் நடைபெற்றன.
நாமக்கல் மாவட்ட தேசிய பசுமைப் படை இணைந்து திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயில் மலைப் பகுதியில் நெகிழிப் பைகள், கழிவுகளை அகற்றும் சமுதாயத் தூய்மைப் பணி நடைபெற்றது. நிகழ்வில் நம்ம திருச்செங்கோடு அமைப்பின் தலைவா் பரந்தாமன் தலைமை வகித்தாா். மெட்ரிக் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலா் ஜோதி, குமாரபாளையம் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளா் குணசேகரன் வாழ்த்துரை வழங்கினாா். சிறப்பு விருந்தினராக திருச்செங்கோடு சட்டப் பேரவை உறுப்பினா் ஈ.ஆா்.ஈஸ்வரன் தொடங்கிவைத்தாா். பொதுமக்கள் மற்றும் மாணவா்களிடம் மீண்டும் மஞ்சப்பை திட்ட விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
தூய்மைப் பணியில் சுமாா் 1 டன் அளவுள்ள நெகிழிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு திருச்செங்கோடு நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது. நிகழ்வில் 170 பசுமைப் படை தன்னாா்வலா்கள், 15 பசுமைப் படை ஆசிரியா்கள், தன்னாா்வலா்கள், நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.