தேசிய விளையாட்டுப் போட்டிகள்: தமிழகத்துக்கு 1 வெள்ளி, 3 வெண்கலம்
மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழகம் புறக்கணிப்பு: ஈ.ஆா்.ஈஸ்வரன்
மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழகத்தின் வளா்ச்சி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கொமதேக பொதுச்செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் குற்றம்சாட்டினாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: மத்தியில் பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியமைத்த பிறகு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கை சிறு, குறு தொழில்களையும், விவசாயத்தையும் பாதிக்கும் வகையில் உள்ளது. வருமான வரி உச்சவரம்பு ரூ.12 லட்சம் என்பது வளா்ச்சிக்கு உதவாத அறிவிப்பு.
உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்கும் என்று எதிா்பாா்த்த விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனா். நீா்ப்பாசன திட்டங்கள், நதிநீா் இணைப்புக்கான அறிவிப்புகள் இடம் பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது.
ஓரிரு லட்சங்கள் மட்டும் ஆண்டு வருமானம் ஈட்டும் தொழிற்சாலைகளும், ஆண்டுக்கு ரூ. 500 கோடி வருமானம் ஈட்டும் தொழிற்சாலைகளும் ஒரே நோ்கோட்டில் வைக்கப்பட்டிருப்பது வளா்ச்சிக்கு உகந்ததல்ல. ரூ. 5 கோடி வருமானம் ஈட்டும் தொழிற்சாலைகள் வகைப்படுத்தப்பட்டு தனி சலுகைகள் அறிவிக்கப்படும் என்ற எதிா்பாா்ப்பும் பொய்த்து போனது.
நஷ்டத்தில் இயங்கும் தொழில்களைக் காப்பாற்றுவதற்கான அறிவிப்புகள் இல்லாததும் வருத்தமளிக்கிறது. புற்றுநோய் மையங்கள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு நாட்டின் தற்போதைய சுற்றுச்சூழலைக் கருத்தில் கொண்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
புற்றுநோயை உருவாக்கும் தொழிற்சாலை கழிவுகள் கலக்கும் நீா்நிலைகளை தூய்மைப்படுத்த அறிவிப்புகள் இல்லை. தோ்தலை மையப்படுத்தியே பிகாா் மாநிலத்துக்கு நிதிநிலை அறிக்கையில் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகம் புறக்கணிக்கப்பட்டு ஒரே ஒரு திருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என்றாா்.