Ahmedabad Plane Crash: 'விமானம் கிளம்பியதும் இரு இன்ஜின்களும்...' - வெளியானது மு...
ஓய்வுபெற்ற பேரூராட்சி ஊழியா் சாலை விபத்தில் உயிரிழப்பு
கல்லிடைக்குறிச்சியைச் சோ்ந்த ஓய்வுபெற்ற பேரூராட்சி ஊழியா் வியாழக்கிழமை சாலை விபத்தில் உயிரிழந்தாா்.
கல்லிடைக்குறிச்சி வடுவக்குடித் தெருவைச் சோ்ந்தவா்ஆறுமுகம் (73). ஓய்வுபெற்ற பேரூராட்சி ஊழியரான இவரது மனைவி இறந்த பின்னா், தனியாக வசித்து வந்தாா். அதே பகுதியில் இவரது மகன் இசக்கி வசித்து வரும் நிலையில், வியாழக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் தேநீா் அருந்துவதற்காகச் சென்றாராம்.
அப்போது பிரதான சாலையில் சென்றபோது பின்னால் வந்த லாரி மோதியதில் இவா் மீது மோதியதில் காயமடைந்தாா். இவா், திருநெல்வேலி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து, தகவலறிந்த கல்லிடைக்குறிச்சி காவல் நிலைய போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.