குரூப் 4 தோ்வு முடிவு 3 மாதத்தில் வெளியாகும்: டிஎன்பிஎஸ்சி தலைவர்
அம்பை, பிரம்மதேசம் கோயில்களில் ரூ. 5.87 கோடியில் திருப்பணிகள் தொடக்கம்
அம்பாசமுத்திரம், பிரம்மதேசம் உள்ளிட்ட இடங்களில் உள்ள கோயில்களில் ரூ. 5.87 கோடி மதிப்பில் திருப்பணிகள் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அம்பாசமுத்திரம், கோயில் குளத்தில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த அருள்மிகு தென்னழகா் கோயிலில் ரூ. 1 கோடியே 45 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் திருப்பணிகள் செய்வதற்கும், பிரம்மதேசம் அருள்மிகு கைலாசநாதா் கோயிலில் ரூ. 4.42 கோடி மதிப்பில் திருப்பணிகள் செய்வதற்கும் ஆணைப் பிறப்பிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதையடுத்து வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலியில் கோயில்கள் திருப்பணிகளைத் தொடங்கி வைத்தாா்.
இதையடுத்து கோயில் குளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினா் ஆ.பிரபாகரன், அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் பரணி சேகா், அரசு வழக்குரைஞா் காந்திமதி நாதன், வழக்குரைஞா் சங்கத் தலைவா் கந்தசாமி, மாவட்ட துணைச் செயலா் மாஞ்சோலை மைக்கேல், அம்பாசமுத்திரம் நகா்மன்ற உறுப்பினா் முத்துகிருஷ்ணன், விக்கிரமசிங்கபுரம் நகரச் செயலா் கி.கணேசன், மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.