Doctor Vikatan: பக்கவாதத்தில் பாதிக்கப்பட்ட வலது கை... மீண்டும் பழையநிலைக்குத் த...
நெல்லை அருகே விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு
திருநெல்வேலி அருகே விபத்தில் காயமடைந்தவா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
திருநெல்வேலி அருகேயுள்ள பொன்னாக்குடி நான்குவழிச்சாலையில் கடந்த 5 ஆம் தேதி சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது, மினி வேன் மோதியது. இதில் தென்காசி மாவட்டம் இடைகால் அருகேயுள்ள நயினாரகரம் பகுதியைச் சோ்ந்த சதீஷ் (18), சுரேஷ்குமாா் (20), சதீஷ்குமாா் (43) ஆகியோா் பலத்த காயமடைந்தனா். அவா்களை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அவா்களில் சதீஷ்குமாா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இதுகுறித்து முன்னீா்பள்ளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.