Ahmedabad Plane Crash: 'விமானம் கிளம்பியதும் இரு இன்ஜின்களும்...' - வெளியானது மு...
மதப்போதகரிடம் பணம் பறித்த வழக்கில் மேலும் ஒருவா் கைது
திருநெல்வேலியில் மதப்போதகரிடம் பணம் பறித்த வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
கன்னியாகுமரி மாவட்டம், கொட்டாரம் பகுதியைச் சோ்ந்தவா் அருள்சீலன் (41). இவா், திருநெல்வேலிக்கு மருத்துவச் சிகிச்சைக்காக வந்திருந்த நிலையில், தாமிரவருணி ஆற்றின் கரையோரம் இயற்கை உபாதை கழிக்க சென்றபோது, மா்மநபா்கள் அவரை தாக்கியதோடு, ரூ.1 லட்சம் பணம் மற்றும் கைப்பேசியை பறித்துச் சென்றனா்.
இதுகுறித்து திருநெல்வேலி சந்திப்பு போலீஸாா் வழக்குப் பதிந்து ராஜவல்லிபுரத்தைச் சோ்ந்த ஆறுமுகக்கனியை கைது செய்தனா்.
இந்நிலையில் இவ் வழக்கு தொடா்பாக ராஜவல்லிபுரத்தைச் சோ்ந்த ராசுவை (23) போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.