செய்திகள் :

ஓரணியில் தமிழ்நாடு! மக்களிடம் ஓடிபி பெற தடை: உயர் நீதிமன்ற மதுரை கிளை

post image

மதுரை: ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில், திமுக உறுப்பினர் சேர்க்கையின்போது மக்களிடமிருந்து ஓடிபி பெறுவதற்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை பிறப்பித்துள்ளது.

திமுகவின் ஓரணியில் தமிழ்நாடு என்ற உறுப்பினர் சேர்க்கை பிரசாரம் தமிழகம் முழுவதும் தொடங்கி நடந்து வருகிறது. இதனை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள், மக்களிடைமிருந்து ஓடிபி பெற தடை விதித்துள்ளனர்.

இந்த வழக்கில், இந்திய தேர்தல் ஆணையத்தையும் சேர்த்து, பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.

டிஜிட்டல் முறையில் தனிநபர் தரவுகள் எவ்வாறு பாதுகாப்படுகிறது என்பது பற்றி மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருப்பதோடு, ஓடிபி தகவல்களை பொதுமக்கள் யாருக்கும் வழங்க வேண்டாம் என்று காவல்துறையினர் எச்சரித்து வரும் நிலையில், எதற்காக ஓடிபி கேட்கிறார்கள் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

ஆதார் உள்ளிட்ட விவரங்களை சேகரிக்கும் நிறுவனம் அதனை விற்பனை செய்தால் என்ன செய்வது? சேகரிக்கப்படும் விவரங்கள் எவ்வாறு கையாளப்படுகிறது என்பதற்கான விவரங்கள் இல்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

கீழடி அறிக்கை நிராகரிப்பா? அமர்நாத் ராமகிருஷ்ணன் மாற்றம் ஏன்? மக்களவையில் விளக்கம்

மக்களவையில் கீழடி விவகாரம் குறித்து திமுக எம்பி தமிழச்சி தங்கப்பாண்டியன் எழுத்துப்பூர்வமாக எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய கலாசாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் பதிலளித்துள்ளார்.நாடாளுமன்ற மழைக்கா... மேலும் பார்க்க

பள்ளிக் கட்டடங்கள் மீது அலட்சியமா? - அண்ணாமலை கேள்வி

தமிழகத்தில் அனைத்து பள்ளிக் கட்டடங்களையும் தர உறுதிப் பரிசோதனைக்கு உள்ளாக்க வேண்டும் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.ஈரோடு கோபிசெட்டிபாளையம் அருகே கூகலூர் ஊராட்சி ஒன்றிய ... மேலும் பார்க்க

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: தலைமைச் செயலர்கள் ஆஜர்

சென்னை: தலைமைச் செயலாளர்களுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டதில் நீதிமன்றம் மகிழ்ச்சி கொள்ளவில்லை, தர்மசங்கடமாகவே கருதுகிறது என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித... மேலும் பார்க்க

முதல்வர் மு.க. ஸ்டாலின் விரைவில் வீடு திரும்புவார்: துரைமுருகன்

முதல்வர் மு.க. ஸ்டாலின் நலமுடன் இருக்கிறார், விரைவில் வீடு திரும்புவார் என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று(திங்கள்கிழமை) காலை வழக்கமான நடைப்பயிற்சியில் ஈடுபட்டிர... மேலும் பார்க்க

திரெளபதி அம்மன் கோயிலில் காளியாட்டம்!

திரெளபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழாவை முன்னிட்டு நகரின் முக்கிய வீதிகளில் காளி ஆட்டம் நடைபெற்றது.தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் அருள்மிகு திரெளபதி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இந்த... மேலும் பார்க்க

மருத்துவமனையில் முதல்வர் அனுமதி: குடும்பத்தினர், அமைச்சர்கள் வருகை!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலினைப் பார்க்க குடும்பத்தினர், அமைச்சர்கள் மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று(திங்கள்கிழமை) காலை நடைப்பயிற்சியில் ஈ... மேலும் பார்க்க