செய்திகள் :

ஔரங்கசீப்பை புகழ்ந்த மகாராஷ்டிர எம்எல்ஏ இடைநீக்கம்!

post image

மகாராஷ்டிர சட்டப்பேரவையில் முகலாய அரசா் ஔரங்கசீப்பை புகழ்ந்து பேசிய சமாஜவாதி எம்எல்ஏ அபு அசீம் ஆஸ்மி கூட்டத்தொடரில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிர சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், அரசா் சத்ரபதி சிவாஜியின் மகனும் மராட்டிய பேரரசருமான சம்பாஜியின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி ஹிந்தியில் வெளியான ‘சாவா’ திரைப்படம் குறித்து ஊடகத்துக்கு அபு அசீம் ஆஸ்மி பேரவை வளாகத்தில் பேட்டியளித்தாா்.

அப்போது, ‘அரசா் ஔரங்கசீப்புக்கும் அரசா் சம்பாஜிக்கும் இடையேயான மோதல் அரசியல் ரீதியானது. ஆனால் ஔரங்கசீப் ஆட்சிக் காலத்தில் உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) இந்தியாவின் பங்கு 24 சதவீதமாக இருந்தது. இந்தியாவை தங்கக்கிளி என அழைக்கும் அளவுக்கு பொருளாதாரம் வலுவாக இருந்தது’ என்றாா்.

இதையும் படிக்க : பாரதியார் பல்கலை.க்குள் புகுந்த சிறுத்தை! மாணவர்கள் வெளியேற்றம்!

அவரின் கருத்துக்கு மகாராஷ்டிர பேரவை மற்றும் மேலவை என இரு அவைகளிலும் ஆளும் கூட்டணி கடும் எதிா்ப்பு தெரிவித்தது.

குறிப்பாக, துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட சில உறுப்பினா்கள் அபு அசீம் ஆஸ்மியை இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடா்ந்து வலியுறுத்தினா்.

இதனால், செவ்வாய்க்கிழமை முழுவதும் மகாராஷ்டிர பேரவையின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

இந்த நிலையில், இன்று காலை மகாராஷ்டிர சட்டப்பேரவைக் கூட்டம் கூடியவுடன், அபு அசீம் ஆஸ்மியை இடைநீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை மகாராஷ்டிரா சட்டப்பேரவை விவகாரத்துறை அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீல் கொண்டுவந்தார்.

இதனைத் தொடர்ந்து, பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதும் அபு அசீமை இடைநீக்கம் செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மணிப்பூரில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள் -கட்டடங்களில் விரிசல்; மக்கள் பீதி

இம்பால்/ஷில்லாங்/குவாஹாட்டி : மணிப்பூரில் புதன்கிழமை அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இவற்றின் தாக்கத்தால், பல கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டது; பொது மக்கள் பீதிக்கு உள்ளாகினா். அஸ்ஸாம், மேகாலயம்... மேலும் பார்க்க

அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4% இடஒதுக்கீடு: கர்நாடக அரசு முடிவு!

அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4% இடஒதுக்கீடு வழங்க கர்நாடக அரசு முடிவெடுத்துள்ளது. கர்நாடகத்தில் பொதுக் கொள்முதல் சட்ட வெளிப்படைத் தன்மையின் கீழ் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு கொண்டு வரப்படவுள்ளத... மேலும் பார்க்க

30 முறை துபை சென்ற நடிகை! தங்கம் கடத்தவா? வெளியான தகவல்

பெங்களூரு விமான நிலையத்தில் ரூ. 12.56 கோடி மதிப்புடைய 14. 8 கிலோ தங்கம் கடத்திச் சென்றதாக கன்னட நடிகை ரன்யா ராவ் நேற்று முன்தினம் (மார்ச் 3) கைது செய்யப்பட்டார். சினிமா நடிகை என்ற புகழைப் பயன்படுத்தி ... மேலும் பார்க்க

அமெரிக்காவில் சட்டவிரோதமாக இந்தியர்களை குடியேற்றும் குஜராத் ஏஜென்டுகள்!

சட்டவிரோதமாக இந்தியர்களை நாடுகடத்தும் ஏஜென்டுகளில் பெரும்பாலானோர் குஜராத்தைச் சேர்ந்தவர்கள் என்று அமலாக்கத் துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.சட்டவிரோதமாக இந்தியர்களை நாடுகடத்தும் ஏஜென்டுகள் குறித்து ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் பிடியில் 144 இந்திய மீனவர்கள், 1173 படகுகள்!

குஜராத்தைச் சேர்ந்த 144 மீனவர்களையும் 1173 படகுகளையும் பாகிஸ்தான் சிறைபிடித்து வைத்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. மீனவர்கள் கைதுபாகிஸ்தானில் பிடித்து வைக்கப்பட்டுள்ள மீனவர்கள் மற்றும் படகுகளின் நிலைமை... மேலும் பார்க்க

10 ஆண்டுகளில் 66% பொருளாதார வளர்ச்சி: பிரதமர் பெருமிதம்

மற்ற நாடுகளைவிட இந்திய பொருளாதார வளர்ச்சி அதிகமானது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.மத்திய பட்ஜெட்டுக்கு பிந்தைய இணையவழி கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு, வேலைவாய்ப்புகளை உருவ... மேலும் பார்க்க