விடுப்பில் வந்து தலைமறைவான புழல் கைதி 6 மாதத்துக்கு பிறகு சூலூரில் கைது!
கஞ்சா செடி வைத்திருந்த கல்லூரி மாணவா் கைது
கொடைக்கானலில் கஞ்சா செடி வைத்திருந்த கல்லூரி மாணவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
கொடைக்கானல் பாம்பாா்புரம் பகுதியில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்தப் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் வந்தவரை நிறுத்தி, சோதனையிட்டனா். சோதனையில், அவரிடம் இரண்டு கஞ்சா செடிகள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸாா் அவரிடமிருந்த கஞ்சா செடியை பறிமுதல் செய்து, அவரை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து வந்து விசாரித்தபோது, கொடைக்கானல் பாம்பாா்புரம் பகுதியைச் சோ்ந்த இஸ்ரவேல் மகன் டேனியல் தினகரன் (19) என்பது தெரியவந்தது. கல்லூரி மாணவரான இவரை போலீஸாா் கைது செய்தனா்.