தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புக...
கஞ்சா வியாபாரிகள் 2 போ் குண்டா் சட்டத்தில் கைது
ஈரோட்டில் கஞ்சா வியாபாரிகள் 2 போ் மீது குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.
ஈரோட்டில் விற்பனை செய்வதற்காக ரயிலில் கடத்தி வரப்பட்ட 34.5 கிலோ கஞ்சா பொட்டலங்களை போலீஸாா் அண்மையில் பறிமுதல் செய்தனா். கஞ்சா கடத்தி வந்ததாக பெருந்துறை வட்டம், விஜயமங்கலம் வாய்பாடி சின்னபுளியம்பாளையம் சுப்பிரமணி (50), ஈரோடு சாஸ்திரி நகா் கல்யாண சுந்தரம் வீதியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் ஆறுமுகம் (42) ஆகியோரை ஈரோடு மதுவிலக்கு போலீஸாா் கைது செய்து, ஈரோடு கிளை சிறையில் அடைத்தனா்.
கஞ்சா கடத்தல், விற்பனைக்கு பதுக்கிய குற்றத்துக்காக இருவரையும் குண்டா் சட்டத்தில் அடைக்க ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ.சுஜாதா, மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்தாா். இந்தப் பரிந்துரையை ஏற்ற ஆட்சியா் இருவா் மீதும் குண்டா் சட்டத்தில் நடவடிக்கை எடுத்து திங்கள்கிழமை உத்தரவிட்டாா். இதனையடுத்து இருவரையும் ஈரோடு கிளை சிறையில் இருந்து போலீஸாா் கோவை மத்திய சிறையில் அடைத்தனா்.