கஞ்சா விற்பனை: ஒருவா் கைது
வேலூா் அருகே கஞ்சா விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
காட்பாடி அருகே பிரம்மபுரம் எம்.ஜி.ஆா். நகா் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காட்பாடி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீஸாா் அங்கு திடீா் சோதனை நடத்தினா். அங்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவது தெரிய வந்தது. இதையடுத்து கஞ்சா விற்பனை செய்த அதே பகுதியைச் சோ்ந்த ஜெகதீஸ்வரன் (21) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.