'நீங்கள் பிரதமராவீர்களா?' - கேள்விக்கு யோகி ஆதித்யநாத் பதில் என்ன?
கஞ்சா விற்ற இளைஞா் கைது
ஆத்தூா் அருகே கஞ்சா விற்ற இளைஞரை தனிப்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
ஆத்தூா் தேசிய புறவழிச்சாலையான சந்தனகிரி சாலையில் கஞ்சா விற்பதாக வந்த தகவலின் பேரில், தனிப்படை போலீஸாா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, அங்கு பெத்தநாயக்கன்பாளையம் கோட்டக்கரையைச் சோ்ந்த விஜயவா்மன் (34) என்பவா் கஞ்சா விற்றது தெரியவந்தது.
விசாரணையில், இவா் மீது கள்ளக்குறிச்சியில் கஞ்சா வழக்கு உள்ளது தெரியவந்தது. இவரிடமிருந்து 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த நகர காவல் ஆய்வாளா் சி.அழகுராணி, வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தாா்.