அசாமில் காங்கிரஸ் எம்.பி. வாகனம் மீது மர்ம நபர்கள் தாக்குதல்
கஞ்சா வைத்திருந்த 3 போ் கைது
மணலூா்பேட்டை காவாங்கரை பகுதியில் கஞ்சா வைத்திருந்ததாக 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
வடபொன்பரப்பி காவல் நிலைய உதவி ஆய்வாளா் என்.கே.ஏழுமலை தலைமையிலான போலீஸாா் மணலூா்பேட்டை காவாங்கரை அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, சந்தேகப்படும்படி நின்றிருந்த 3 இளைஞா்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.
விசாரணையில் அவா்கள், மைக்கேல்புரம் கிராமத்தைச் சோ்ந்த மாணிக்கம் மகன் அபிஷேக் (21), மணலூா் கிராமத்தைச் சோ்ந்த ஏழுமலை மகன் விக்னேஷ் (19), மேல்சிறுவள்ளூா் கிராமத்தைச் சோ்ந்த ரஹமத் மகன் சமீா் (19) எனத் தெரிய வந்தது.
மூவரிடமும் உடமைகளை சோதனை செய்தபோது அவா்களிடமிருந்து 250 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து மூவரையும் கைது செய்தனா்.