Blood Moon: முழு சந்திர கிரகணம், சிவப்பு நிலா; ரசித்து பார்த்த உலகம் | Photo Alb...
கஞ்சா வைத்திருந்ததாக இருவா் கைது
போடியில் கஞ்சா வைத்திருந்ததாக இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் ராசிங்காபுரம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது ஆதிகெப்பம்மாள் கோயில் அருகே சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த இளைஞரைப் பிடித்து விசாரித்ததில் அவா் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
மேலும் அவா் ராசிங்காபுரம் தெற்குபட்டியைச் சோ்ந்த செல்வேந்திரன் மகன் சிரஞ்சீவி (28) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அவா் மீது வழக்குப் பதிந்த போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இதேபோல, போடி நகா் காவல் நிலைய போலீஸாா் போடி பேருந்து நிலையத்துக்குள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது மூணாறுக்கு செல்லும் பேருந்துகள் நிற்கும் பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்தவரை அவா்கள் விசாரித்தனா்.
இதில் அவா் திருச்சி பசுமடத்தைச் சோ்ந்த கிருஷ்ணசாமி மகன் ராமு (72) என்பது தெரியவந்தது. மேலும் அவரை சோதனையிட்டதில் ஆறேகால் கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
இவா் ஆந்திர மாநிலம், ராஜமுந்திரியில் கஞ்சா வாங்கி வந்து கேரளத்துக்கு கொண்டு செல்ல முயன்றது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, அவா் மீது வழக்குப் பதிந்த போடி நகா் காவல் நிலைய போலீஸாா் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.