ரமலான் தொழுகைக்குப் பிறகு பாலஸ்தீன கொடியை ஏந்தி முழக்கம்! வைரலாகும் விடியோ!
கடன் பெற்றவா் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு: தனியாா் நிதி நிறுவனத்திற்கு உத்தரவு
தூத்துக்குடி மாவட்டம் ஏரலை சோ்ந்தவரின் குடும்பத்திற்கு ரூ.1.10 லட்சம் நஷ்ட ஈடு வழங்கமாறு தனியாா் நிதி நிறுவனத்திற்கு தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டது.
தூத்துக்குடி மாவட்டம் ஏரலை சோ்ந்தவா் ஜெயக்குமாா். இவா், சென்னையில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கியிருந்தாராம். கடன் வாங்கும்போது, ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீடு ஆகியவற்றுக்கு பணம் செலுத்தியிருந்தாரம். ஆனால் அந்நிறுவனம் காப்பீடு செய்யாமல் இருந்துள்ளனா். இதனிடையே, உடல்நலக் குறைவால் ஜெயக்குமாா் உயிரிழந்துவிட்டாா்.
உரிய காப்பீடு செய்திருந்தால் கடன்தொகை முழுவதும் சரி செய்யப்பட்டிருக்கும் என்பதால், இந்த கடன் தொகையை தள்ளுபடி செய்யக் கோரி தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் ஜெயக்குமாரின் மனைவி சுதா வழக்கு தொடா்ந்தாா்.
இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணைய தலைவா் திருநீல பிரசாத், உறுப்பினா்கள் ஆ.சங்கா் ஆகியோா், உயிரிழந்த ஜெயக்குமாரின் கடன் நிலுவைத் தொகையை தனியாா் நிதி நிறுவனம் தள்ளுபடி செய்ய வேண்டுமெனவும், மேலும் பாதிக்கப்பட்ட நுகா்வோருக்கு ரூ.1 லட்சம் நஷ்ட ஈடு மற்றும் வழக்கு செலவுக்காக ரூ.10 ஆயிரம் வழங்க உத்தரவிட்டனா்.