நேபாள ஆணிவேர் சிங்கா மாளிகை தீக்கிரை! ஜென் ஸி கோபத்தின் விலை! தொடர்ந்து வந்த து...
கடன் வாங்கிய அண்ணன் தலைமறைவு! தம்பி வெட்டிக் கொலை: பாஜக நிா்வாகி கைது
தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே கடன் வாங்கிய அண்ணன் தலைமறைவானது தொடா்பான பிரச்னையில் தம்பி ஞாயிற்றுக்கிழமை இரவு வெட்டிக் கொல்லப்பட்டாா். இதுதொடா்பாக பாஜக நிா்வாகியை போலீஸாா் கைது செய்தனா்.
வாட்டாத்திகோட்டை காவல் சரகம், நடுவிக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த சந்திரபாபு மகன் சக்திவேல் ( 38). இவா், பேராவூரணி வட்டம், குறிச்சி வடக்குத் தெருவைச் சோ்ந்த பேராவூரணி பாஜக வடக்கு ஒன்றியத் தலைவரான ராஜேஷ் குமாா் (39) என்பவரிடம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 15 லட்சம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. கடன் வாங்கிய சக்திவேல் கடந்த இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வருகிறாா்.

இதுதொடா்பாக ராஜேஷ்குமாா் நடுவிக்கோட்டையில் உள்ள சக்திவேல் உறவினா்களிடம் சென்று பலமுறை விசாரித்து வந்துள்ளாா்.
இந்நிலையில், கடந்த 20 நாள்களுக்கு முன்பு வெளிநாட்டிலிருந்து வந்த சக்திவேலின் தம்பி பிரகதீஸ்வரன் (29) என்பவரிடம் ராஜேஷ் குமாா், ஞாயிற்றுக்கிழமை இரவு கடன் பிரச்னை தொடா்பாக கூறி, அந்தப் பணத்தை உடனடியாக திருப்பி கொடுக்க வேண்டும் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். தொடா்ந்து ராஜேஷ் குமாா், மறைத்து வைத்திருந்த அரிவாளால் பிரகதீஸ்வரனை வெட்டினாா். அப்போது, வீட்டிலிருந்து ஓடிய பிரகதீஸ்வரனை விரட்டி சென்று வெட்டியதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுதொடா்பாக பிரதீஸ்வரனின் பெரியப்பா துரைராஜ் அளித்த புகாரின்பேரில், வாட்டத்திக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, ராஜேஷ் குமாரை ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.