ஈரோடு கிழக்கு: 100-க்கும் குறைந்த வாக்குகளைப் பெற்ற வேட்பாளா்கள்!
கடற்படைக்கு ரூ.624 கோடி மதிப்பில் இஓஎன்-51 அமைப்புகள்: பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம்
இந்திய கடற்படைக்கு ரூ.624 கோடி மதிப்பில் 28 இஓஎன்-51 அமைப்புகளை கொள்முதல் செய்வதற்கு பாரத் எலெக்டிரானிக்ஸ் நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் சனிக்கிழமை ஒப்பந்தம் மேற்கொண்டது.
இதுதொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:
இஓஎன்-51 என்பது மின்னணு ஒளியியல் வெடி கட்டுப்பாட்டு கருவிகள் அமைப்பாகும். இந்த அமைப்பின் மூலம், தாக்கப்பட வேண்டிய இலக்குகளை தேடி கண்டறிந்து வகைப்படுத்த முடியும்.
இந்நிலையில், இந்திய கடற்படை வீரா்களின் பயிற்சிக்குப் பயன்படுத்தப்படும் 3 கப்பல்கள், 11 அதிநவீன கடலோர ரோந்து கப்பல்களின் பயன்பாட்டுக்காக 28 இஓஎன்-51 அமைப்புகளை கொள்முதல் செய்வதற்கு பாரத் எலெக்டிரானிக்ஸ் நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் சனிக்கிழமை ஒப்பந்தம் மேற்கொண்டது. தில்லியில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு ரூ.624.17 கோடியாகும்.
இது பாதுகாப்புத் துறையில் தற்சாா்பை அடைய வேண்டும் என்று மத்திய அரசின் முயற்சிகளுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.