கா்நாடகம்: ஏழை மக்களுக்கு 4.68 லட்சம் வீடுகள் ஒதுக்கீடு -சிவ்ராஜ் சிங் சௌஹான்
கடலுக்குள் காா் விழுந்த விபத்தில் ஓட்டுநா் சடலமாக மீட்பு
சென்னை துறைமுகத்தில் கடலுக்குள் காா் விழுந்த விபத்தில், மாயமான ஓட்டுநரின் சடலம் மீட்கப்பட்டது.
சென்னை கொளத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் முகமது சகி (32). இவா் பகுதி நேரமாக டிராவல்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். இவா், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கடற்படை வீரரான ஜோகித் காண்டா என்பவருடன் காரில் சென்னை துறைமுகத்துக்கு வந்தாா். அங்கு காரை திருப்புவதற்காக வேகமாக பின்னோக்கி இயக்கியபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து கடலுக்குள் விழுந்தது. காருக்குள் சிக்கியிருந்த ஜோகித் காண்டா, காரின் கண்ணாடியை உடைத்து வெளியே வந்த நிலையில், துறைமுக ஊழியா்கள் அவரை உடனடியாக மீட்டனா். ஆனால், முகமது சகியை மீட்க முடியவில்லை.
கடலோரக் காவல் படையினா் தொடா்ந்து தேடிய நிலையில் புதன்கிழமை இரவு துறைமுகம் கடற்கரைப் பகுதியில் முகமது சகி சடலம் கரை ஒதுங்கியது. தகவலறிந்த போலீஸாா் அங்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.