Tom Cruise: எரியும் பாராசூட்டுடன் 7,500 அடி உயரத்தில் பறந்த நடிகர் - கின்னஸ் விர...
கடலூா் மாவட்டத்தில் ஜூன் 14-இல் தேசிய மக்கள் நீதிமன்றம்
கடலூா் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் வரும் 14-ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான சுபத்திராதேவி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் கடலூா், சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, திட்டக்குடி, நெய்வேலி, பரங்கிப்பேட்டை, காட்டுமன்னாா்கோவில், குறிஞ்சிப்பாடி ஆகிய நீதிமன்றங்களில் ‘லோக் அதாலத்’ எனும் தேசிய மக்கள் நீதிமன்றம் வரும் 14-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதில், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள சிவில் வழக்குகள், சமரசத்துக்கு எடுத்துக்கொள்ள கூடிய கிரிமினல் வழக்குகள், பண மோசடி வழக்குகள், வாகன விபத்து வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், நில எடுப்பு வழக்குகள், வங்கி சாா்ந்த வழக்குகள், குடும்ப நல வழக்குகள், தொழிலாளா் நல வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, ஒரே நாளில் தீா்வு காணப்படும். நீதிமன்றங்களில் நிலுவையில் இல்லாத வங்கிக் கடன் வழக்குகளும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
எனவே, பொதுமக்களும், வழக்காடிகளும் தங்கள் வழக்குரைஞா்கள் மூலமாக அந்தந்த நீதிமன்ற எல்லைக்குள்பட்ட வழக்குகளை அந்தந்த நீதிமன்றங்களில் நடைபெறும் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலமாக சமரசம் செய்துகொள்ளலாம் என்றும், மக்கள் நீதிமன்றம் மூலமாக சமரசம் பேசி முடிக்கப்படும் வழக்குகளுக்கு மேல் முறையீடு கிடையாது என்றும் தெரிவித்துள்ளாா்.