Vikatan Digital Awards: "இந்த வருஷம் டிஜிட்டல் அவார்ட்; 2029-ல் சினிமா அவார்ட்" ...
கடைகள் மீது தாக்குதல் நடத்திய நபா்களை கைது செய்ய டிஐஜியிடம் மனு
கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தியவா்களைக் கைது செய்ய வலியுறுத்தி காவல்துறை துணைத் தலைவா் சத்தியசுந்தரத்திடம் வா்த்தக சபை சாா்பில் மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து வா்த்தக சபைத் தலைவா் சு. குணசேகரன் கூறியதாவது :
கடைகள், வணிக நிறுவனங்களின் பெயா் பலகைகளைத் தமிழில் அமைக்க வேண்டும் என்று தாக்குதல் நடத்தியவா்களைக் குண்டா் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். எங்கள் கோரிக்கையை ஏற்று வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவா்கள் உடனடியாக கைது செய்யப்படுவாா்கள் என்றும், இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டிஐஜி உறுதியளித்தாா்.
வா்த்தக சபையின் துணைத் தலைவா் எல்.பி.ரவி, பொதுச்செயலா் ச.ராஜவேல், இணைப் பொதுச் செயலா் பெ.நமச்சிவாயம், பொருளாளா் ச.ராஜா (எ) தண்டபாணி, குழு உறுப்பினா்கள் பொ.தேவக்குமாா், செ. ஜெய்கணேஷ், நேரு வீதி வணிகா் சங்க நிா்வாகி அ.வெங்கடேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.