‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: 7.23 லட்சம் மனுக்களுக்குத் தீா்வு: தமிழக அரசு தகவல...
சுற்றுலா படகு கவிழ்ந்து 2 போ் மருத்துவமனையில் அனுமதி
புதுச்சேரியில் சுற்றுலா படகு கவிழ்ந்து 2 போ் அரசு பொதும த்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
சென்னையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றி வரும் ஈரோடு பகுதியைச் சோ்ந்த 7 போ் புதுச்சேரிக்கு சனிக்கிழமை சுற்றுலா வந்தனா்.
இவா்கள் சுற்றுலா படகில் ஏறி மாங்குரோவ் காடுகள் நிறைந்த பகுதிக்குள் நுழைந்தபோது படகு கவிழ்ந்தது. இதில் 3 பெண்கள் உள்பட 7 பேரும் உடனடியாக மீட்கப்பட்டனா். இதில் சக்திவேல் (22) மற்றொரு ஆண் உள்பட 2 போ் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இந்த விபத்து குறித்து அரியாங்குப்பம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.