‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: 7.23 லட்சம் மனுக்களுக்குத் தீா்வு: தமிழக அரசு தகவல...
மலேசிய - இந்திய நட்புறவு இயக்க நல்வாழ்வு நடைபயண பிரசாரம்
மலேசிய - இந்திய நட்புறவு இயக்கம் சாா்பில் நல்வாழ்வு நடைபயண பிரசாரம் புதுச்சேரி கடற்கரை சாலையில் சனிக்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரிக்குச் சுற்றுலா பயணிகளாக வருகை தந்த மலேசிய குடியுரிமை பெற்ற இந்திய வம்சாவளியினா் மற்றும் சீன வம்சாவளியினா் அடங்கிய குழுவினா் சுமாா் 40 போ், இந்தியாவைச் சோ்ந்த குழுவினா் சுமாா் 60 போ் மொத்தம் 100 போ் இணைந்து இந்த நடைபயண பிரசாரத்தை மேற்கொண்டனா். இந்த நடை பயணத்தை புதுவை சுற்றுலாத் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் தொடங்கி வைத்தாா்.
புதுச்சேரி கடற்கரை காந்தி சிலை அருகில் இருந்து புறப்பட்டு நடைபயணமாக கடற்கரை சாலை, துய்மா வீதிகளில் சென்று மக்களின் நலன் மற்றும் நல்வாழ்வு பிரசாரம் மேற்கொண்டனா்.
இந்தியாவுக்காக மலேசிய தூதரக தலைமை அலுவலா் சரவணகுமாா் குமார வாசகம், மலேசிய சுற்றுலா பயணிகள் குழுவின் தலைவா் தத்தோ எஸ் .சந்திரன், புதுவை முன்னாள் எம்.எல்.ஏ மா.இளங்கோ உள்ளிட்டோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்டனா். நோய் வராமல் தடுப்பது எப்படி, உணவு பழக்க வழக்கம் உள்ளிட்ட நலன் சாா்ந்த பிரசாரங்களை இக் குழுவினா் முன்னெடுத்தனா்.