செய்திகள் :

‘கடைசில முதல்ல யார் வர்றாங்கங்கிறதுதான் முக்கியம்!’ - ஹூண்டாயை எப்படி முந்தியது மஹிந்திரா?

post image

`இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய கார் உற்பத்தியாளர்' என்ற பெருமையை மஹிந்திரா அடைந்திருக்கிறது. கடந்த 25 ஆண்டுகளாக இந்த இடத்தில் இருந்த ஹூண்டாய் இப்போது மூன்றாவது இடத்திற்குச் சென்றுவிட்டது.

கடந்த 2024-ம் நிதியாண்டோடு, 2025-ம் ஆண்டை ஓப்பிடும்போது, ஹூண்டாய் க்ரெட்டாவின் விற்பனை 20% அதிகரித்திருக்கிறது. ஆனாலும் ஹூண்டாய் இரண்டாவது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்குப் போனதற்குக் காரணம் - அது க்ரெட்டாவை மட்டுமே அதிகமாக நம்பியதுதான். அதாவது இதே காலகட்டத்தில் ஹூண்டாயின் மற்ற கார்களான i10 நியோஸ், i20, ஆரா, எக்ஸ்ட்டர், வென்யூ, அல்கஸார், டூஸான், ஐயனிக் 5 ஆகிய ஒட்டுமொத்தக் கார்களின் விற்பனை 10% சரிவைச் சந்தித்திருக்கிறது.

மஹிந்திராவின் வளர்ச்சிக்கான காரணம், அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். பெட்ரோல்/டீசல் கார்களான XUV 3XO, தார், தார் ராக்ஸ், ஸ்கார்ப்பியோ, ஸ்கார்ப்பியோ-N ஆகிய கார்களில் அது கவனம் செலுத்திய அதே வேளையில், மின்சாரக் கார்களான BE 6 மற்றும் XEV 9e ஆகியவற்றுக்கும் அது தொடர்ந்து முக்கியத்துவம் கொடுத்து வந்ததுதான் அதன் எழுச்சிக்குக் காரணமாக அமைந்திருக்கிறது.

ஜனவரி - ஜூலை 2025-க்கு இடையிலான இந்தக் காலகட்டத்தில் ஹூண்டாயின் விற்பனை 3,29,782 கார்கள் என்றால், மஹிந்திராவின் விற்பனை 3,51,065 கார்கள்.

விட்ட இரண்டாவது இடத்தைப் பிடிக்க ஹூண்டாய் அக்டோபர் மாதம் ஆல்-நியூ வென்யூவை விற்பனைக்குக் கொண்டு வருகிறது. பிடித்த இடத்தைத் தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள, மஹிந்திரா மேலும் இரண்டு புதிய கார்களை அடுத்து வரும் மாதங்களில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கிறது.

`மஹிந்திராவுக்கும் - ஹூண்டாய்க்கும்தானே போட்டி, நமக்கென்ன’ என்று முதலிடத்தில் இருக்கும் மாருதி சுஸூகி அமைதியாக இருக்க முடியாது. ஏனெனில், அதன் விற்பனையும் 1.9% அளவுக்குக் குறைந்திருக்கிறது. எனவே, மாருதியும் தன் பங்குக்குப் புதிய கார்களை விற்பனைக்குக் கொண்டுவர இருக்கிறது. நான்காவது இடத்தில் இருக்கும் டாடாவோ, அடுத்தடுத்து சின்னதும் பெரியதுமாகப் பல புதிய அறிமுகங்களைச் செய்யத் திட்டம் தீட்டியிருக்கிறது.

இந்தப் பண்டிகைக் காலத்தில், கார் கம்பெனிகளுக்கு இடையே நடக்கும் இந்தப் பந்தயத்தில் வெற்றி பெறப்போவது என்னவோ நிச்சயம் வாடிக்கையாளர்களாகத்தான் இருக்கும். அறிவிக்கப்பட இருக்கும் ஜிஎஸ்டி வரிக்குறைப்பும் வாடிக்கையாளர்களுக்குச் சாதகமாக இருந்தால்... வரும் காலம் கோலாகலமான பண்டிகைக் காலமாக மாறிவிடும்.

ஏத்தர் அறிமுகப்படுத்திய கான்செப்ட் டூவிலர்கள்! Ather EL 01 & Ather Redux

Ather ReduxAther ReduxAther ReduxAther ReduxAther ReduxAther ReduxAther ReduxAther ReduxAther ReduxAther ReduxAther ReduxAther ReduxAther ReduxAther ReduxAther EL 01 and Ather reduxAther EL 01 and Ath... மேலும் பார்க்க

Car: '35 ஆண்டுகள், 100 ஆடம்பர கார்கள்' - ரூ.8500 கோடி மதிப்புள்ள வீட்டை கார் மியூசியமாக மாற்றிய நபர்

மகாராஷ்டிராவின் புனே நகரம் வாகனங்களுக்குப் புகழ் பெற்றது. புனேயைச் சேர்ந்த தொழிலதிபர் மகன் ஒருவர் தனது கார் கேரேஜ் முழுக்க ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வரிசையாக நிறுத்தி இருக்கிறார். யோகன் பூனாவாலா என்ற அந்த... மேலும் பார்க்க

Freedom 125 வெளியாகி ஓராண்டு நிறைவு; இந்த Bajaj CNG பைக் நிஜ வாழ்க்கையில் எப்படி வேலை செய்கிறது?

ஒரு வருடத்திற்கு முன், பஜாஜ்,உலகிலேயே முதல் முறையாக CNG மற்றும் பெட்ரோல் இரண்டிலும் ஓடும் Freedom 125 பைக்கை அறிமுகப்படுத்தியது. குறைந்த செலவில் பயணம் செய்யவும், எரிபொருள் கிடைக்காத இடங்களில் மாற்று வ... மேலும் பார்க்க

ஏன் இந்த அடிமையின் சின்னம்? - VT என்ற எழுத்துகள் தேவையா?

கடந்த ஆகஸ்ட் 3ம் தேதி, சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு பயணமானோம். விரிவாக்கப்பட்ட தூத்துக்குடியின் புதிய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்து ஒரு வாரம் கழித்து... அன்றுதான் பயணிகள் விமான சேவை இந்... மேலும் பார்க்க