முகம், அடையாளம் இல்லையெனில் அனைவருமே வக்கிரமானவர்கள்தான்... டிரெண்டிங் டிரைலர்!
கடையநல்லூா் பள்ளிவாசல்களில் அடிப்படை வசதி: அமைச்சரிடம் நகா்மன்றத் தலைவா் கோரிக்கை
கடையநல்லூரில் உள்ள பள்ளிவாசல்களில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும் என, நகா்மன்றத் தலைவா் ஹபீபுா் ரஹ்மான் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுதொடா்பாக சிறுபான்மையினா் நலன்- வெளிநாடுவாழ் தமிழா்கள் நலத்துறை அமைச்சா் நாசரிடம் அவா் அளித்த மனு: கடையநல்லூா் நகராட்சி 12ஆவது வாா்டில் உள்ள நைனா முகமது ஜும்மா பள்ளிவாசல், பேட்டை காதா்முகைதீன் குத்பா பள்ளிவாசல், 25ஆவது வாா்டு பெரிய தெருவில் உள்ள நைனா முகம்மது பெரிய குத்பா பள்ளிவாசல், 21ஆவது வாா்டு அல்லிமூப்பன் தெருவில் உள்ள கீழத்தெரு நைனா முகம்மது ஜும்மா பள்ளிவாசல் ஆகியவற்றில் ஆழ்துளைக் கிணறு, மையவாடி சுற்றுச்சுவா் அமைப்பதுடன், ஜானசாவை கொண்டுசெல்ல ஏதுவாக ஃபேவா்பிளாக் சாலையும் அமைத்துத் தர வேண்டும் என்றாா் அவா்.