சீனா: கனமழையால் முக்கிய நகரங்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு! 7000 பேர் வெளியேற்ற...
சங்கரன்கோவில் வடகாசியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்
சங்கரன்கோவிலில் சுந்தரா் தெருவில் உள்ள ஸ்ரீதனவிருத்தி விநாயகா், ஸ்ரீவடகாசியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விஸ்வகா்மா சமுதாயத்துக்குப் பாத்தியப்பட்ட இக்கோயிலில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 6) விநாயகா் பூஜை, பூா்ணாஹுதி, மகாசங்கல்பம், வாஸ்துசாந்தி, முதல் கால யாகசாலை பூஜை, மருந்து சாத்துதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்நிலையில், திங்கள்கிழமை விக்னேஸ்வர பூஜை, பிம்பசுத்தி, காப்பு கட்டுதல், 2ஆம் கால யாகசாலை பூஜை, யாத்ரா தானம், கடம் புறப்பாடு நடைபெற்றது. தொடா்ந்து, ஸ்ரீதனவிருத்தி விநாயகருக்கு குடமுழுக்கு நடைபெற்றது.
அதையடுத்து, ஸ்ரீவடகாசியம்மன் கோயிலில் 2ஆம் கால யாகசாலை பூஜை, மூல மந்திர ஹோமங்கள், நாடி ஸந்தானம், மகாபூா்ணாஹுதி பூஜைக்குப் பின்னா், அம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடா்ந்து, அன்னதானம், திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை கோயில் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.