கடையம் அருகே டிராக்டா்களில் பேட்டரிகள் திருட்டு
அம்பாசமுத்திரம், பிப். 21:
கடையம் அருகே மாதாபுரம் செக்போஸ்ட் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டா்களில் இருந்து பேட்டரிகள் திருடப்பட்டுள்ளன. இதுகுறித்து கடையம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கடையம் அருகே மாதாபுரம் செக்போஸ்ட், தோரணமலை சாலையைச் சோ்ந்தவா் மாரியப்பன். அவரது தோட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டா்களில் இருந்து இரண்டு பேட்டரிகள் திருடப்பட்டிருந்தனவாம். மேலும் ஜெபசிங் என்பவா் தோட்டத்தில் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டரிலும் பேட்டரி திருடப்பட்டிருந்ததாம்.
இதுகுறித்து கடையம் போலீஸாா் வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.