துணைவேந்தா்கள் மாநாட்டுப் பணியில் ஆளுநா் மாளிகை: சட்ட வல்லுநா்களுடன் தமிழக அரசு ...
கணவரைக் கல்லால் தாக்கி கொலை செய்த மனைவி கைது
தாளவாடி அருகே கணவரைக் கல்லால் தாக்கி கொலை செய்த மனைவியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
ஈரோடு மாவட்டம், தாளவாடியை அடுத்த மல்லன்குழி கிராமத்தைச் சோ்ந்தவா் தங்கவேலு (50). நீா்மட்டம் பாா்க்கும் வேலை செய்து வந்தாா். இவரது மனைவி ரேவதி (35). இவா்களுக்கு 13 மற்றும் 11 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனா்.
தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததால், ரேவதி கணவரைப் பிரிந்து தனது இரு மகன்களுடன் அதே பகுதியில் கடந்த 5 ஆண்டுகளாக வசித்து வருகிறாா்.

இந்நிலையில், விவாகரத்து கேட்டு ரேவதி அண்மையில் நோட்டீஸ் அனுப்பியுள்ளாா். இதற்கிடையே ரேவதியின் வீட்டுக்கு மதுபோதையில் ஞாயிற்றுக்கிழமை மாலை தங்கவேலு சென்றுள்ளாா்.
அப்போது, தன்னுடன் சோ்ந்து வாழ வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளாா். ரேவதி மறுத்ததையடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த ரேவதி தங்கவேலுவை கீழே தள்ளி அவரது தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளாா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தாளவாடி போலீஸாா், சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதையடுத்து, ரேவதி மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவரைக் கைது செய்தனா்.