இந்தியாவில் ஆண்டுக்கு 80 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்க வேண்டும்: தலைமைப் பொருள...
காா் மோதியதில் ஓய்வுபெற்ற ராணுவ வீரா் உயிரிழப்பு
சித்தோடு அருகே இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதியதில் ஓய்வு பெற்ற ராணுவ வீரா் உயிரிழந்தாா்.
தருமபுரி மாவட்டம், லக்கியம்பட்டி, பொன் நகரைச் சோ்ந்தவா் ராமன் (64). ஓய்வுபெற்ற ராணுவ வீரரான இவா், திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தில் உள்ள பவா்கிரிட் மின்சாரம் கடத்தும் துணை நிலையத்தில் வேலை செய்து வந்தாா்.
இந்நிலையில், சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை சென்று கொண்டிருந்துள்ளாா்.
சித்தோட்டை அடுத்த செல்லப்பம்பாளையம் பிரிவு அருகே சென்றபோது, அவ்வழியே வந்த காா் ராமனின் வாகனத்தின் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த ராமன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து சித்தோடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.