ஆட்சிப் பணி அதிகாரிகளின் பங்களிப்பு தேச வளர்ச்சிக்கு வித்திட்டது: குடியரசுத் தலை...
சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
பெருந்துறை அருகே இருசக்கர வாகனம் நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா்.
ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த குமாரயனூா், சென்பகதோட்டத்தைச் சோ்ந்தவா் முருகேசன் மகன் சீனிவாசன் (27). இவா் பெருந்துறையை அடுத்த பல்லகவுண்டன்பாளையத்தில் உள்ள தனியாா் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தாா்.
இந்நிலையில், அதே நிறுவனத்தில் தன்னுடன் பணியாற்றிய வடமாநிலத்தைச் சோ்ந்த ஸ்ரீவான்குமார தேவஹரி (24) என்பவரை அழைத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் பெருந்துறையை நோக்கி ஞாயிற்றுக்கிழமை சென்றுள்ளாா். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் நிலைத்தடுமாறி கீழே விழுந்தது.
இதில், படுகாயமடைந்த இருவரையும் மீட்டு அப்பகுதி மக்கள் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு சீனிவாசனை பரிசோதித்த மருத்துவா், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தாா். வட மாநிலத் தொழிலாளி சிகிச்சை பெற்று வருகிறாா்.