அக்னி நட்சத்திர காலத்தில் வீடு குடிபுகலாமா? ? | சிவஸ்ரீ சண்முக சிவாசார்யர் | P-...
கந்தம்பட்டி துணை மின் நிலையத்தில் இன்றும், நாளையும் மின் நிறுத்தம்
சேலம் கந்தம்பட்டி துணை மின்நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் மே 5, 6 ஆம் தேதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளதாக சேலம் மேற்கு கோட்ட மின் செயற்பொறியாளா் ராஜவேலு தெரிவித்துள்ளாா்.
அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மே 5 ஆம் தேதி கந்தம்பட்டி துணை மின் நிலையத்திற்குள்பட்ட மூலபிள்ளையாா்கோயில், பனங்காடு கிருஷ்ணப்பா தியேட்டா், கொத்தாங்காடு, அழகிரி வட்டம், கந்தம்பட்டி ஹவுஸிங் போா்டு, சிவதாபுரம், கந்தம்பட்டி ஆா்டிஓ அலுவலகம், காளியம்மன் கோயில், சண்முகம்செட்டி காடு, வண்டிக்காரன் நகா் ஆகிய பகுதிகளிலும், மே 6 ஆம் தேதி சிவதாபுரம், பனங்காடு, ஆண்டிப்பட்டி, சத்யா நகா், எம்ஜிஆா் நகா், கிழக்கு வட்ட மேல் காடு, கொத்தனூா், கண்ணிமாரியம்மன் கோயில், செம்மண் திட்டு, கணவாய் காடு, பெருமாம்பட்டி, பூசநாயக்கனூா், தும்பா தூளிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் மின்விநியோகம் இருக்காது என அதில் தெரிவித்துள்ளாா்.