'அன்புமணி பெயர் இல்லை...' - ராமதாஸ் வெளியிட்ட நிர்வாக குழு பட்டியல்!
கந்து வட்டிக் கொடுமை: முதியவா் மீது வழக்கு
கம்பம் அருகே பெண்ணிடம் கந்துவட்டி கேட்டு கொடுமைப்படுத்தி, அவரது வீட்டை பூட்டிச் சென்ற முதியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள காமயகவுண்டன்பட்டி கருமாரிபுரத்தைச் சோ்ந்த மணிகண்டன் மனைவி ராதிகா (42). இவா், கருநாக்கமுத்தன்பட்டியைச் சோ்ந்த ஞானமணியிடம் (60) ரூ. 25 ஆயிரம் வட்டிக்கு பணம் வாங்கினாா்.
இதற்காக மாதந்தோறும் ரூ.3, 725 வீதம் 4 ஆண்டுகளாக பணம் செலுத்தினாராம். கடந்த ஓராண்டாக வட்டிப் பணம் கொடுவில்லையாம். இதையடுத்து ஞானமணி, அவரது கூட்டாளிகள் ராதிகாவின் வீட்டை பூட்டிவிட்டுச் சென்றனா்.
இந்த நிலையில், ஞானமணி கந்து வட்டி கேட்டு கொடுமைப்படுத்துவதாக ராதிகா ராயப்பன்பட்டி காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தாா். இதையடுத்து, போலீஸாா் ஞானமணி மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.