விநாயகர் சதுர்த்தி: சாணியில் செதுக்கிய விநாயகர் சிலைகள்; நிலக்கோட்டை பெண்ணின் பு...
கன்னியாகுமரி முருகன் குன்றத்தில் இன்று ஆடி கிருத்திகை
கன்னியாகுமரி பழத்தோட்டம் அருகேயுள்ள முருகன்குன்றம் வேல்முருகன் கோயிலில் ஆடி கிருத்திகை விழா வெள்ளிக்கிழமை (ஆக.15) நடைபெற உள்ளது.
இதையொட்டி, கோயிலில் காலை முதல் மாலை வரை பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளன. நண்பகல் 12.30 மணிக்கு அன்னதானம், மாலை 6.30 மணிக்கு துளசி, பச்சை, சம்பங்கி, தாமரை, அரளி, சிவந்தி, மல்லி, பிச்சி, கொழுந்து, ரோஜா உள்ளிட்ட பல வகையான மலா்களால் வேல்முருகன் சுவாமிக்கு மலா் முழுக்கு விழா நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.