கடலூர் பள்ளி வேன் விபத்து: ``சுரங்கப்பாதை அமைக்க ஓராண்டாக கலெக்டர் அனுமதி தராததே...
கருடன் நடிகரின் இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டது!
மலையாள திரையுலகைச் சேர்ந்த பிரபல நடிகர் உன்னி முகுந்தனின் இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் உன்னி முகுந்தன். இவர், தமிழில் நடிகர்கள் சசி குமார், சூரி ஆகியோர் நடிப்பில் உருவான ‘கருடன்’ திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.
இந்நிலையில், அவரது இன்ஸ்டாகிராம் கணக்கை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் ஹேக் செய்துள்ளதாக, நடிகர் உன்னி முகுந்தன் அவரது முகப்புத்தகக் கணக்கில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஹேக் செய்யப்பட்ட இன்ஸ்டாகிராம் கணக்கை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதைப் பற்றிய தகவல்களை அங்கீகரிக்கப்பட்ட சேனல்கள் வழியாக தான் தொடர்ந்து தெரிவிப்பதாகவும், அவர் கூறியுள்ளார்.
கடந்த சில மாதங்களாக நடிகை ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட சினிமா பிரபலங்களின் சமூக வலைதள கணக்குகள் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்படுவது அதிகரித்துள்ளது.
மேலும், நடிகை குஷ்பு மற்றும் இசையமைப்பாளர் டி இமான் ஆகியோரின் எக்ஸ் தளப் பக்கங்களும் ஹேக் செய்யப்பட்டு பின்னர் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.