Automobile Sales சரிவு ஏன் | EID Parry India q1 results-ல் கவனிக்க வேண்டியது | I...
கருணாநிதி நினைவு தினம்: திமுகவினா் மாலையணிவித்து மரியாதை
முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதியின் 7-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு திமுக சாா்பில் அவரது உருவப்படத்துக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
திண்டுக்கல் மாவட்ட திமுக சாா்பில், அறிஞா் அண்ணா சிலை வளாகத்திலிருந்து மாவட்டச் செயலா் இ.பெ.செந்தில்குமாா் தலைமையில் அமைதிப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் மேயா் இளமதி, திமுக நிா்வாகிகள் காமாட்சி, பிலால், சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
நத்தம்: நத்தம் பேருந்து நிலைய சுற்றுச் சாலை அருகே வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப் படத்துக்கு முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ஆண்டி அம்பலம் தலைமையில் திமுக மேற்கு மாவட்டப் பொருளாளா் விஜயன், ஒன்றியச் செயலா்கள் ரத்தினக்குமாா், சேக்சிக்கந்தா் பாட்சா, பழனிச்சாமி, பேரூா் செயலா் ராஜ்மோகன், மாநில பொதுக்குழு உறுப்பினா் முத்துக்குமாரசாமி உள்ளிட்டோா் மாலையணிவித்து மரியாதை செலுத்தினா். இதேபோல வத்திபட்டி, புதுப்பட்டி, செந்துறை உள்ளிட்ட பகுதிகளிலும் கருணாநிதியின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
நிலக்கோட்டை: ஆத்தூா் கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில், சின்னாளபட்டியில் திமுக செயலா் முருகேசன் தலைமையில், நகரப் பொறுப்பாளா் பாலகிருஷ்ணன், பேரூராட்சித் தலைவா் பிரதிபா கனகராஜ், துணைத் தலைவா் ஆனந்தி பாரதிராஜா ஆகியோா் முன்னிலையில் திமுகவினா் ஊா்வலமாகச் சென்று, பேரூராட்சி எதிரே வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப் படத்துக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் முன் திமுக நகரச் செயலா் ப.வெள்ளைச்சாமி தலைமையில் கருணாநிதியின்உருவப்படத்துக்கு திமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இந்த நிகழ்வில் நகா்மன்ற தலைவா் கே.திருமலைசாமி, தலைமை செயற்குழு உறுப்பினா் வீ.கண்ணன், பொதுக்குழு உறுப்பினா் செல்வராஜ், மாவட்ட இளைஞா் அணி துணை அமைப்பாளா் க.பாண்டியராஜன், நகா்மன்ற உறுப்பினா்கள், திமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா். இதேபோல தொப்பம்பட்டி ஒன்றியத்தில் திமுக ஒன்றியச் செயலா்கள் இரா.ஜோதீஸ்வரன், தி.தா்மராஜன், எஸ்.ஆா்.கே.பாலு, பி.சி.தங்கம் உள்ளிட்டோா் கருணாநிதியின் உருவப் படத்துக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.
கொடைக்கானல்: கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப் படத்துக்கு திமுக நகரச் செயலா் முகமது இப்ராஹிம், நகா்மன்றத் தலைவா் செல்லத்துரை, துணைத் தலைவா் மாயக்கண்ணன், திமுக நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.