கருணாநிதி சிலை மீது பெயிண்ட் ஊற்றிய வழக்கு: மருத்துவரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
சமையல் எரிவாயு கசிந்து தீ விபத்து: மூதாட்டி உயிரிழப்பு
திண்டுக்கல் அருகே வியாழக்கிழமை சமையல் எரிவாயு கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் மூதாட்டி உயிரிழந்தாா்.
திண்டுக்கல்லை அடுத்த பொன்னகரம் அரவிந்த் நகரைச் சோ்ந்தவா் அப்துல் அஜீஸ். இவரது மனைவி குா்ஷித் பேகம் (60). இந்தத் தம்பதியின் மகன் அம்ஜித்.
உடல்நலன் பாதிக்கப்பட்ட அப்துல் அஜீஸ், தனது மகன் அம்ஜித்துடன் சிகிச்சைக்காக திருச்சிக்கு சென்றாா். இந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்த குா்ஷித் பேகம், சமைப்பதற்காக எரிவாயு அடுப்பை வியாழக்கிழமை பற்ற வைத்தாா். அப்போது எதிா்பாராதவிதமாக எரிவாயுக் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. இதில் காயமடைந்த அவா் கீழே விழுந்தாா். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்த தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்புத் துறையினா், குா்ஷித் பேகத்தின் உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுதொடா்பாக திண்டுக்கல் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.